காவிரி மகளிர் கல்லூரியில் பாரதியார் பிறந்தநாள் விழா

மேச்சேரி, டிச.13: மேச்சேரி தி காவிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரதியாரின் பிறந்த நாள் விழா தமிழ்த்துறை சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை மரியம் குருசி வரவேற்றார். கல்லூரி முதல்வர் செல்வகுமார் பாரதியின் சிந்தனைகளை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். தமிழ்த்துறை தலைவர் கவிதா பாரதியின் தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று, பெண் கல்வி, அறிவியல் சிந்தனைகள் குறித்து பேசினார். உதவிப்பேராசிரியை கவிதா பெண் கல்வி, விடுதலை தாகம், தமிழ்ப்பற்று போன்ற பாரதியின் பெருமைகளை பேசினார். தொடர்ந்து, மாணவிகளுக்கு பாரதியார் குறித்த பேச்சு, கவிதை மற்றும் பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் நடேசன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், தலைவர் அன்பழகன், செயலாளர் இளங்கோவன், தாளாளர் ராமநாதன், செயல் இயக்குநர் கருப்பண்ணன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன் ஆகியோர் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். உதவிப்பேராசிரியை லதா நன்றி கூறினார்.

Related Stories:

>