×

பேளுக்குறிச்சி அருகே பொது கிணறு அருகில் தனியார் கிணறு வெட்டுவதை தடுக்க பொதுமக்கள் மனு

சேந்தமங்கலம், டிச.13:  சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சி அருகே புகழ்பெற்ற பழனியப்பா கோயில் உள்ளது. பேளுக்குறிச்சி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நோக்கில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, ஊராட்சி சார்பில், இந்த கோயில் அடிவாரத்தில்,  சுமார் 80 அடி ஆழத்திற்கு  கிணறு வெட்டப்பட்டது. குடிநீர் வினியோகித்து வந்தனர். தற்போது இந்த கிணற்றில் சுமார் 50 அடிக்கும் மேலாக தண்ணீர் உள்ளது.
இந்நிலையில் அந்த கிணற்றின் அருகில், பள்ளிப்பட்டியை சேர்ந்த சிலர், புதியதாக கிணறு வெட்டும் பணியை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வரும் ஊராட்சி கிணற்றின் நீர்மட்டம் பதிக்கப்படும். இதையடுத்து பேளுக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், தனியார் கிணறு வெட்டும் பணிக்கு தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் கிராம மக்கள், ஊராட்சி கிணற்றுக்கு அருகில், புதிய கிணறு வெட்டும் பணியை சேந்தமங்கலம் தாசில்தார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் நகலை, தாசில்தார் ஜானகியிடம் கொடுத்து கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், நேரில் ஆய்வு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

Tags : Belulurichi ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு