×

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், டிச.13: நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், நேற்று விவசாயிகள் கொண்டு வந்த 3 ஆயிரம் மூட்டை பருத்தி, ₹60 லட்சத்துக்கு விற்பனையானது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 3 ஆயிரம் மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ₹4,707 முதல் ₹5,395 வரையிலும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 3 ஆயிரம் மூட்டை பருத்தி, ₹60 லட்சத்துக்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் சங்கத்துக்கு பருத்தி வரத்து அதிகமாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Cotton auction ,Namakkal Co-operative Society ,
× RELATED கூத்தம்பூண்டி வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பருத்தி ஏலம்