×

தர்மபுரி சாலை விநாயகர் கோயிலில் சாலை விரிவாக்க பணி தாமதத்தால் அவதி

தர்மபுரி, டிச.13: தர்மபுரி டவுன் சாலை விநாயகர் கோயில் சாலையில் இருந்து, பச்சையம்மன் மயானம் வரையிலான சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி நகரின் பிரதானமாக சாலை விநாயாகர் கோயில் சாலை உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் வாகன போக்குவரத்து அதிகரித்து வந்தது. இதனால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தர்மபுரி கோட்ட நெடுஞ்சாலைதுறையினர், சாலை விநாயகர் கோயில் சாலையை ₹1.5 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 5 மாதத்திற்கு முன்பு, காந்தி சிலையில் இருந்து அரசு மருத்துவமனை பிரிவு ரோடு வரை அகலப்படுத்த, சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  இதனையடுத்து சாலையின் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி நடந்து முடிந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சாலை அகலப்படுத்தும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கியது. காந்தி சிலை முதல் அரசு மாணவியர் விடுதி வரையில், சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள சுமார் 200 மீட்டர் தூர சாலை பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Road ,Dharmapuri Road Ganesha Temple ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...