×

நான்கு வழி சாலை பணிக்காக 100க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டி சாய்ப்பு

அரூர், டிச.13: அரூர் வழியாக, வாணியம்பாடி வரை நான்கு வழி சாலை பணிக்காக, 100க்கும் மேற்பட்ட சாலையோர புளிய மரங்கள் ெவட்டிப்பட்டுள்ளது. சேலம் அயோத்தியாப்பட்டினத்திலிருந்து அரூர் வழியாக, வாணியம்பாடி வரை நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் சேலம் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், முதற்கட்டமாக எ.பள்ளிப்பட்டியிலிருந்து ஊத்தங்கரை வரை, 44 கிமீ தொலைவிற்கு, 70 சாலை வளைவுகளை சீரமைக்கவும், பெரியது முதல் சிறியது வரை 80 பாலங்கள் கட்டுவது  என, மொத்தம் ₹296 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை 2ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே சாலை விரிவாக்க பணிக்காக, சாலையோரம் உள்ள புளிய  மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 500 மரங்கள் அகற்றப்படும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 200 மரங்களை மட்டும் வெட்டி அகற்ற, நெடுஞ்சாலைதுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2நாட்களாக, புதுப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பகுதியில், சாலையோரங்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட புளிய மரங்களை வெட்டும் பணி நடந்து வருகிறது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா