×

காரிமங்கலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

காரிமங்கலம், டிச.13: காரிமங்கலத்தில் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் பேரூராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடைவீதி, ராமசாமி கோயில், பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி ரோடு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ராமசாமி கோயில் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும், பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள, சாக்கடை கால்வாய்களை ஆக்கிரமித்து, வணிக நிறுவனங்கள் கடையை கட்டியுள்ளனர். இதனால் சாலைகள் குறுகிய நிலையில் உள்ளது. மேலும், சாக்கடை கால்வாய்களில் தண்ணீர் செல்லாமல், பல இடங்களில் தேங்கிய நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,buildings ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...