×

எல்ஐசி உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

தர்மபுரி, டிச.13: எல்ஐசி உதவியாளர் பணிக்கு நடைபெற உள்ள பிரதான தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு சேலத்தில் நாளை 14ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, இன்சூரன்ஸ் ஊழியர்கள், தேசிய கூட்டமைப்பு பொது செயலாளர் ஸ்ரீகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கை: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) உதவியாளர் பணிக்கு, கடந்த அக்டோபர் 30ம் தேதி மற்றும் 31ம் தேதி ஆகிய தேதிகளில், முதல்நிலைத் தேர்வு நடந்தது. இத்தேர்வில் 1070 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு வரும் 22ம் தேதி பிரதான தேர்வு நடைபெற உள்ளது. எனவே, இத் தேர்வர்களுக்கு பிரதான தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில், இலவச பயிற்சி முகாம் இச்சங்கத்தின் சார்பில், நாளை 14ம் தேதி (சனிக்கிழமை) சேலம் மரவனேரியில் உள்ள தேசிய சேவா சமிதி மையத்தில் நடைபெற உள்ளது. எனவே, தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா