×

குருபரஹள்ளி அங்கன்வாடி மையம் அருகே மின் மீட்டரால் விபத்து அபாயம்

கடத்தூர், டிச.13:கடத்தூர் அருகே குருபரஹள்ளி அங்கன்வாடி கட்டிடம் எதிரே விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மின் மீட்டரை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தூர் அடுத்த குருபரஹள்ளியில் சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கன்வாடி மையத்திற்கு எதிரே, மின் மீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மீட்டருக்கான, இரும்பு பெட்டிகள் உடைந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு எதிரே குழந்தைக்ளுக்கு எட்டும் வகையில் இருக்கும் இந்த மின் பெட்டியால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த மின் பெட்டிகளை சீரமைத்து, பாதுகாப்பாக அமைக்க ேவண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : center ,Kuruparahalli Anganwadi ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்