×

நூலஹள்ளி அரசு பள்ளியில் புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு

தர்மபுரி, டிச.13: தர்மபுரி அருகே நூலஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், புத்தகத்தை வாசிக்கும் பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.   மாணவர்கள் நூல் வாசிப்பின் அவசியத்தையும், அறிஞர்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகத்தை வாசிக்கும் பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, தர்மபுரி அருகே நூலஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் 330 மாணவ, மாணவிகளை புத்தக பேரவை உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்து பேசினார். முன்னாள் எம்பி செந்தில் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட மக்களிடம் குறிப்பாக, பள்ளி கல்லூரி மாணவர்களிடம் நூல் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். முற்போக்கு சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டது. இதில் தகடூர் புத்தக பேரவை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் நரசிம்மன் செய்திருந்தார்.

Tags : Noolahalli Government School ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா