×

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை ஒழிக்க ேவண்டும்

தர்மபுரி, டிச.13: மனித கழிவுகளை அகற்றுவதற்கு, மனிதர்களை பயன்படுத்தும் முறையை, முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என, தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசினார். தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசியதாவது: மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம், இந்நாட்டில் இன்னமும் நீடித்து கொண்டிருப்பதை, இந்த சபை அறியும் என்றே நம்புகிறேன். இந்த சமூக கொடுமையில் சிக்கி, உயிரை விடுவோரின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்தும் வருகிறது. இது ஒரு தேசிய அவமானம். மனித தன்மையற்ற இந்த செயல், இன்னமும் நாடெங்கிலும் உள்ளது. இந்த பணியை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது, இந்த சமூகம் திணித்து, வேடிக்கை பார்ப்பதும், முற்றிலும் துயரமானது. சமீபத்தில், சென்னையில் உள்ள பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் கூட, இந்த அவலத்தால், ஒருவர் உயிரிந்தார். இதுபோன்ற வணிக வளாகத்தை நடத்தும் பணவசதி கொண்ட கோடீஸ்வர்களுக்கு, மனித கழிவுகளை அகற்ற, எந்திரங்கள் வாங்குவதற்கு முன்வர வேண்டும்.

மனித கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தும் முறையை, முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். 100 சதவீத அளவுக்கு, இயந்திரங்கள் வாயிலாகவே, கழிவுகளை அகற்றுவதற்குண்டான வழிமுறைகளும், நடைமுறைகளும், மத்திய அரசிடம் இருக்கிறா இல்லையா என்பதை, அறிய விரும்புகிறேன். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடித்து, இனிமேலும், ஒரு உயிர்பலி கூட நடந்துவிடக்கூடாது. அதற்கான பணியில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் ேபசினார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா