×

திருப்புத்தூரில் ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி ஒருவர் காயம்

திருப்பத்தூர், டிச. 13:  திருப்புத்தூரில் கட்டிட வேலை பார்த்தவர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தொழிலாளி பலியானார். ஒருவர் லேசான காயமடைந்தார். திருப்புத்தூர் காந்திசிலை அருகே பழைய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிந்து புதிய பேருந்து நிலையம் திறக்கப்படவுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கம்பி கட்டும் (சென்ட்ரிங்) பணியில் திண்டுக்கல்லை சேர்ந்த ரமேஷ் பீட்டர் (42), நந்தக்குமார் (28) ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து மானகிரி நோக்கி சென்ற தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரமேஷ் பீட்டர் சம்பவ இடத்திலேயே பலியானார். நந்தக்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்ததும் திருப்புத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ரமேஷ் பீட்டர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஜோசப் ராஜ் (37) தூக்கத்தில் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ஜோசப் ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tirupur ,
× RELATED மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு