×

2 வேன்கள் மோதி விபத்து கேரளாவை சேர்ந்த டிரைவர் பலி 4 பேர் படுகாயம்

திருப்புவனம், டிச. 13: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து கேரளாவுக்கு மீன் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நேற்று வந்தது. அப்போது மதுரையிலிருந்து காளையார்கோவிலுக்கு டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்தது. இரண்டு வேனும் திருப்புவனம் அருகே வரும்போது பூவந்தியில் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மீன் வேனில் வந்த டிரைவர் கேரளாவைச் சேர்ந்த திரீஸ்குமார் (40) சம்பவ இடத்திலேயே இறந்தார். வேனில் வந்த கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுரேஷ், அருண், ராகுல் ஆகியோர் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டைல்ஸ் ஏற்றிய வேனை ஓட்டிவந்த மதுரை செல்லூர் கண்ணன் காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : van drivers ,Kerala ,
× RELATED கேரளாவில் பரவிய புதிய கொரோனா