காரைக்குடி கழனிவாசலில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்

காரைக்குடி, டிச. 13:  காரைக்குடி கழனிவாசல் பகுதியில் அரசு புறம்போக்கு இட ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. காரைக்குடி கழனிவாசல் குரூப் சர்வே எண் 498/ 35ல் சுமார் 10 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த இடத்தை தனிநபர் ஒருவர் சுத்தம் செய்து வேலி ஏற்படுத்தி ஆக்கிரமித்து இருந்தார். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று காரைக்குடி வடக்கு போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இப்பணியில் காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

Tags : Karaikudi colony ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்