திருப்புத்தூரில் விபத்து நடக்கும் பகுதியில் வித்தியாசமான எச்சரிக்கை பொதுமக்கள் வரவேற்பு

திருப்புத்தூர், டிச. 13:  திருப்புத்தரில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியில் வழக்கு பிரிவு மற்றும் அபாயம் வரை படத்துடன் வித்தியாசமான முறையில் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
நாடு முழுவதும் பஸ், லாரி, கார், டூவிலர் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்களால் கவனக்குறைவு, அதிகமான வேகத்தில் செல்பது, சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் செல்வது உள்ளிட்ட காரணங்களால் தினந்தோறும் ஏராளமான சாலை விபத்துககள் ஏற்படுகிறது. இதில் பலருக்கு படுகாயம் ஏற்படுகிறது.

இதில் சிலருக்கு மரணம் ஏற்படுகிறது. இதற்காக சாலையில் வளைவுகள் மற்றும் விபத்து பகுதிகளில் வாகனஓட்டிகள் கவனத்திற்காக நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் காவல் துறையினர் எச்சரிக்கை படத்துடன் கூடிய அறிவிப்பு பலகைகள் ரோட்டின் இருபுறங்களிலும் வைத்துள்ளனர். இந்நிலையில் திருப்புத்தூரில் உள்ள சிவகங்கை செல்லும் சாலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்களும் காவு வாங்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் திருப்புத்தூர் நீதிமன்றம் அருகே, வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறையினர் விபத்தை தடுப்பதற்காக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் காவல்துறையினர் சார்பில், வித்தியாசமான முறையில் வேறு எங்கும் இல்லாத அளவில் சாலை விபத்தில் உயிர்பலி ஏற்பட்டால் போடப்படும் வழக்கு பிரிவு (304 ஏ இ.த.ச.) மற்றும் அபாயம் படத்துடன் எச்சரிக்கை விளம்பர அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தினாலும், வேகத்தடை அமைத்துள்ளதாலும் இச்சாலையில் தற்போது விபத்துக்கள் குறைந்துள்ளது. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Tags : area ,Tirupur ,accident ,
× RELATED மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு வரவேற்பு