×

ஒட்டன்சத்திரத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரம், டிச. 13: ஒட்டன்சத்திரம் முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் சேவியர் சிங்கராயர் தலைமை வகித்து துவக்க உரையாற்றினார். ஆசிரியர் முருகேசன், நுகர்வோர் பேரவை மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் மாணவர்களிடம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி நுகர்வோர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் எப்படி வழக்கு தொடுத்து நிவாரணம் பெறுவது குறித்தும் விரிவாக பேசினார். மேலும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசால் இயற்றப்பட்ட பொட்டல பொருட்கள் சட்டம், எடை அளவு முறை சட்டம், உணவுப்பொருட்கள் தர நிர்ணய சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இறுதியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
இதில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு