×

குன்றத்தூர் அருகே பயங்கரம் மின் கம்பத்தில் கார் மோதி ஒருவர் பலி: டிரைவர் படுகாயம்

குன்றத்தூர், டிச.13: வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில்,  மின்னல் வேகத்தில் வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின்  கம்பத்தில் மோதியது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார். உடன் வந்தவர்  இறந்தார்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று மின்னல் வேகத்தில் ஒரு கார் சென்றது. குன்றத்தூர் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார். அவருடன் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது.

தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த டிரைவரை சிகிச்சைக்காகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் திருநின்றவூர், பாலாஜி நகரை சேர்ந்த செந்தில்கனி (43). சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்கிறார். நேற்று மதியம் திருநின்றவூரில் இருந்து மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது விபத்து ஏற்பட்டது தெரிந்தது. மேலும், உடன் வந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் யார் என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Car collision ,
× RELATED சென்னையில் சொகுசு கார் மோதி 2 ஆயுதப்படை காவலர்கள் உயிரிழப்பு