×

மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

செங்கல்பட்டு, டிச.13: மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு அடுத்த  வல்லம் ஊராட்சி, பெரிய தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (42) பெயின்டர். பெரிய மேலமையூர் பகுதியில் பால்ஜேசுதாஸ் என்பவரது வீட்டில் நேற்று, ஆனந்தராஜ் பெயின்டிங் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டின் ஏணியை தூக்கியபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின்சார வயரில் உரசியது.

இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

Tags : Painter ,
× RELATED மின்சாரம் பாய்ந்து பசு பரிதாப பலி