காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் மேம்பால தடுப்பு சுவர்களில் வளர்ந்துள்ள மரங்கள்: விரிசல் ஏற்படும் அபாயம்

காஞ்சிபுரம், டிச.13: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் மேம்பாலம் அமைந்துள்ளது. இங்குள்ள தடுப்பு சுவர்களில் செடிகொடிகள் வேர்விட்டு வளர்ந்துள்ளதால், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் பஸ் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவர்களில், சிறிய அளவில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தற்போது, இந்த மேம்பாலத்தின், தடுப்பு சுவரில், அரச மரம் உள்பட சில மரக்கன்றுகள் சிறிய அளவில் வளர்ந்துள்ளன. இவை, நன்றாக வேர் விட்டு வளரும் பட்சத்தில், பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆரம்பத்திலேயே இந்த மரங்களை அகற்றி, பாலம் பழுதடையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags :
× RELATED வைகையில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு குடிநீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம்