×

வெவ்வேறு சம்பவங்கள் வாகன விபத்தில் 3 வாலிபர்கள் பலி

காஞ்சிபுரம், டிச.13: காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை, இந்திரா நகரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் ஜெகன் (19). சிதம்பரத்தில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் சந்தோஷ் (20).
நேற்று முன்தினம் இரவு ஜெகன், சந்ேதாஷ் ஆகியோர் பைக்கில் காஞ்சிபுரம் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். காஞ்சிபுரம் அடுத்த நசரத்பேட்டையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர்.
அந்த நேரத்தில், எதிரே வேகமாக வந்த லோடு ஆட்டோ, பைக் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த 2 பேரும், பின்னால் வந்த லாரியில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த நெற்குணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (22). பெருந்துறவு கிராமத்தில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி, கல்பாக்கத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சக்திவேல், பெருந்துறவு கிராமத்தில் இருந்து, கல்பாக்கத்துக்கு பைக்கில் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : persons ,vehicle accident ,
× RELATED தகவல் சட்டத்தில் தொடர்ந்து மனு...