மார்ச் 2020 பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், டிச. 13: மார்ச் 2020 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று வரும் 20ம் தேதி மாலை 5.45 மணிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார். திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணவாளநகர் கேஇஎன்சி அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம் ஓஆர்ஜிஎன் அரசு ஆணைகள் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சேவை மையங்கள் உள்ளன.

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் 50 வீதமும், இதர கட்டணம் 35ம் செலுத்த வேண்டும். ஆன்லைன் பதிவு கட்டணமாக 50ம் செலுத்த வேண்டும்.
புதிதாக எழுதவுள்ள தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணம் 150ம், இதர கட்டணம் 35 சேர்த்து 185 செலுத்த வேண்டும். அதோடு ஆன்லைன் பதிவு கட்டணம் 50 செலுத்த வேண்டும். பார்வையற்றோர், வாய் பேசாத, காது கேளாதோர் உட்பட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கலெக்டர் தகவல் கும்பக்கரை அருவியில் குடிநீர் பிளாண்ட் பழுது