கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம் வாலிபர் வெட்டிக்கொலை: 10 பேர் கும்பலுக்கு வலை

கும்மிடிப்பூண்டி, டிச. 13: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகன்நாத்  (35). கும்மிடிப்பூண்டி பஜாரை ஒட்டியுள்ள  காட்டுக்கொள்ளை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே  ஜெகன்நாத் நின்றிருந்தபோது 10 பேர் கொண்ட வடமாநில இளைஞர்கள் திடீரென அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இதையறிந்த  அக்கம்பக்கத்தினர்  கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விரைந்து வந்த போலீசார்  அவரது உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : gangster ,Gummidipoondi ,
× RELATED கந்து வட்டிக் கும்பல் அட்டூழியம்