×

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கருமாரி அம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு: ரஜினி ஆர்.பாஸ்கர் பங்கேற்பு

திருவள்ளூர், டிச. 13: திருவேற்காடு நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை நகர செயலாளர் ரஜினி ஆர்.பாஸ்கர் தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடினர்.  இந்த விழாவையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு கோ பூஜையும், 7 மணியளவில் மாதிரவேடு செல்வ விநாயகர் ஆலயத்தில் கணபதி ஹோமமும், காலை 8 மணியளவில் பள்ளி குப்பத்தில் நலிவுற்றவர்களுக்கு போர்வை மற்றும் படுக்கை விரிப்பு வழங்குதலும், காலை 9 மணியளவில் வள்ளிக்கொல்லைமேடு இந்திரபுரி ஈஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்குதல் நடந்தது. காலை 9.30 மணியளவில் மாதிரவேட்டில் மரக்கன்றுகள் நடுதலும், காலை 10 மணியளவில் மன்ற நிர்வாகிகள் 70 பேர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் பதிவு செய்து வழங்குதலும், 70 பேர்களுக்கு ஹெல்மெட் வழங்குதலும், மேத்தா மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு வலியுறுத்தி மனித சங்கிலியும் நடைபெற்றது.
காலை 11 மணியளவில் கோலடி அரசு உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவும், மதியம் 12 மணியளவில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜையும், அன்னதானமும், அயனம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டது.

இந்த விழாக்களில் ரஜினி மக்கள் மன்ற நகர நிர்வாகிகள் ஆர்.ரமணா, சி.ஆனந்த் எஸ்.ஸ்ரீதர், டி.சுரேஷ், செந்தில்பிரகஷ்,  பி.பொன்ராஜ், எம்.ஜெயகுமார், வி.மேகநாதன், டி.செல்வகணபதி, ஆர்.பிரபா, ஜி.சிவசங்கர், பி.மூர்த்தி, கே.வடிவேலு, இ.வினேஷ் வி.ஆனந்தன் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டி மாலை 6 மணியளவில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நகர செயலாளர் ரஜினி ஆர்.பாஸ்கர் தலைமையில்  தங்கத்தேர் இழுத்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.சி.சேகர், என்.சுனில்சக்கரவர்த்தி, சி.கருணாகரன், வெங்கட்ட முனிவேல், அன்சாரி, ஜெகன், இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Rajinikanth ,Birthday ,Karumari Amman Temple ,
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...