சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி

ஆவடி, டிச. 13: ஆவடி பட்டாபிராம், கோபாலபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ருக்மணி (75). தனது மகள் சாரதா குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சாரதா ஆவடி மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது ருக்மணி தனியாக இருந்துள்ளார்.

இரவு 7 மணி அளவில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ருக்மணி வீட்டில் அகல்விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது அவரது புடவையில் தீப்பிடித்தது. மூதாட்டியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர்  வந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி  ருக்மணி இறந்தார்.  புகாரின்பேரில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Muthathi ,Salem ,
× RELATED ராஜஸ்தானில் 97 வயதான மூதாட்டி கிராம ஊராட்சி தலைவராக தேர்வு