சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி

முத்துப்பேட்டை, டிச.13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வேளாண்மை துறை உதவி இயக்குநர் முரளிபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய இறுதி நாள் வரும் 30ம் தேதி ஆகும். அதனால் வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் பொது சேவை மையம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 28ம்தேதிக்குள் பணத்தை செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய கடன் பெற்ற, கடன் பெறாத விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  உடனே பதிவு செய்து இறுதிநேர நெரிசலை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Samba ,
× RELATED இளையான்குடி பகுதியில் நாட்டு மல்லி சாகுபடி விவசாயிகள் ஆர்வம்