×

ஆள்காட்டுவெளி அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா

முத்துப்பேட்டை, டிச.13: முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டுவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில் மாணவர்கள் பாரதியார் பற்றிய பேச்சுபோட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் உதயா, சத்யா, ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி சுவாதி நன்றி கூறினார்.

Tags : Bharathiar ,Birthday ,Government School ,
× RELATED பென்னிக்குக் பிறந்த நாள்