குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்

திருவாரூர், டிச.13: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திருவாரூரில் நேற்று அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூரில் நேற்று கிடாரங்கொண்டான் அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் இந்திய மாணவர் சங்க மாணவ, மாணவிகள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுர்ஜித் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் அனைத்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மத்திய அரசு முஸ்லீம்கள், சிறுபான்மையினருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியதை கண்டித்து பாரதிதாசன் பல்கலைக் கழக மாதிரிக் கல்லூரி முன்பு மாணவ, மாணவிகள் ஆர்பாட்டம் நடத்தினர். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராகவன், முத்துக்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : protest ,Bill ,
× RELATED அரசு பள்ளியை திறக்க தாமதம் தலைமை...