உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் நியமனம்

தஞ்சை, டிச. 13: தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு சிறப்பு காவலர்களாக முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்பத்தை தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362 230104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>