பேராவூரணி மெயின் சாலை குண்டும், குழியுமாக மாறிய அவலம்

பேராவூரணி, டிச. 13: தொடர்ந்து பெய்து வரும் மழையால் பேராவூரணி மெயின் ரோடு குண்டும், குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பேராவூரணியில் உள்ள மெயின் ரோடு நீலகண்டப்பிள்ளையார் கோயில் துவங்கி அண்ணா சிலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த சாலை பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையாகவும் உள்ளது. இந்த சாலையில் தான் முக்கிய வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், பேருந்து நிலையம், வாரச்சந்தை ஆகியவை உள்ளது. பேராவூரணிக்கு வரும் வாகனங்கள் இந்த சாலையை கடக்காமல் எந்த பகுதிக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. அப்படிப்பட்ட இந்த சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இந்நிலையில் கடந்த 15 நாட்களாக பெய்த மழையில் சாலை சேதமடைந்தது. இந்த சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. மேலும் இரவு நேரங்களில் சாலை தெரியாமலும், பள்ளம் தெரியாமலும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை பெயரளவுக்கு சரி செய்துள்ளனர். இதனால் ஆங்காங்கே மேடும், பள்ளமாக காணப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா கூறியதாவது:நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை பெயரளவுக்கு மட்டுமே சரி செய்துள்ளனர். அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படாமல் உடனடியாக சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றார்.

Advertising
Advertising

Related Stories: