வாகன ஓட்டிகள் அவதி பாபநாசத்தி்ல் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

பாபநாசம், டிச. 13: தினகரன் செய்தி எதிரொலியால் பாபநாசம் அருகே குடிநீர் குழாய் உடைப்பை அதிகாரிகள் சரி செய்தனர். கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் கஞ்சிமேடு செல்லியம்மன் கோயில் அருகில் பேரூராட்சி குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாய் உடைந்ததால் கடந்த 10 நாட்களாக சாலையில் குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சாலையில் குடிநீர் வழிந்தோடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாபநாசம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக உடைந்த குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. இதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags :
× RELATED சிதிலமடைந்த அரசு பள்ளி சீரமைப்பு