சித்தேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி, டிச. 13: திருச்சினம்பூண்டி சித்தேஸ்வரர; கோயிலில் பவுர;ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் (11.12.19) இரவு நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருச்சினம்பூண்டியில் சித்தேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் திருக்காட்டுப்பள்ளி, திருநியமம், திருச்சினம்பூண்டி, திருக்கானூர், திருபொதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை ஆகிய 7 சிவன் கோயில்களை உள்ளடக்கி சப்தஸ்தான (ஏழுர்) திருவிழா நடந்த சிவதிருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் சித்தேஸ்வரருக்கும், சித்தாம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: