திருநாகேஸ்வரம் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கும்பகோணம், டிச. 13: திருநாகேஸ்வரத்தில் தேரோடும் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். அப்போது வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் வரும் 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இந்நிலையில் நான்கு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த சில நாட்களுக்கு முன் திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் அறிவிப்பு வெளியிட்டார். இதைதொடர்ந்து நேற்று மதியம் தேரோடும் நான்கு வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வணிகர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இனி வரும் நாட்களில் அனைத்து கடைகளுக்கும் முன்கூட்டியே அறிவிப்பு தெரிவிக்கப்படும் என்று கூறினர்.இதையடுத்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பின்னர் நான்கு வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் உதவியுடன்அதிகாரிகள் அகற்றினர்.

Related Stories: