×

சட்டப்பூர்வமான கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, டிச.13: பொன்னமராவதியில் துப்புரவு தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான கோரிக்கைகளை நிறைவேற்ற பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சிதுறை தொழிலாளர் சங்கம் சிஐடியூ பொன்னமராவதி பேரூராட்சி கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் தொகை பெருக்கம், நகர வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் காலிப்பணியிடங்களை நிரப்பி புதிய துப்புரவு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும், அதற்கு போதுமான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரப்படவேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு செலக்சன் கிரேடு, ஸ்பெஷல் கிரேடு, ஊதிய உயர்வை உடனுக்குடன் வழங்க வேண்டும். பிரதி மாதம் 5ம் தேதி சம்பளமும் உடன் சம்பள ரசீது பிராவிடண்ட் நிதிக்கான வட்டியும் சரண்டர் சம்பளம் வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த துப்புரவு தொழிலாளி வள்ளியான் குடும்பத்திற்கு காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அறிவித்தபடி பொன்னமராவதி மற்றும் இலுப்பூர் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமட் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பக்ருதீன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் தீன் முன்னிலை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் தர், சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  சிஐடியூ நிர்வாகிகள் கண்ணன், சுப்பிரமணி, அய்யாவு, ஒய்யம்மாள், சவுந்தரம், பஞ்சவர்ணம், சாத்தையா, வீராசாமி, முத்து நாச்சான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : CITU ,demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்