×

புதுக்கோட்டை மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் தேர்வு மும்முரம்

புதுக்கோட்டை, டிச.13: உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தொடங்கியதால் புதுக்கேட்டை மாவட்டத்தில் தலைவர் பதவிகளுக்கு யாரை போட்டியிட வைப்பது என்று பல்வேறு ஊர்களில் பேச்சுவார்தையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்துவதில் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் வரும் 27ம், 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 பஞ்சாயத்துகள் உள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் விருப்ப மனு பெற்று நேர்காணல் நடத்தி வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அரசியல் கட்சிகளில் முக்கிய பதவிகளில் வகிப்பவர்கள் தங்களது சொந்த ஊரில் தலைவர் பதவியை பிடிக்க முனைப்பு காட்டுவார்கள். இந்நிலையில் பெருவாரியான பஞ்சாயத்துகள் இரண்டு மூன்று ஊர்களை இணைத்து ஒரு பஞ்சாயத்தாக உள்ளது. இந்த பஞ்சாயத்துகளில் தேர்தலில் யார் தற்போது வேட்பாளராக களமிறங்வது குறித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஒத்துவராத பஞ்சாயத்துகளில் பலர் போட்டியிடுவதாக கூறி தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, வேட்பாளர் தேர்வு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒருவர் கூறியதாவது: ஒரு பஞ்சாயத்து என்பது 3 ஊர்களுக்கு மேல் இணைக்கப்பட்டிருக்கும். கடந்த முறை ஒரு ஊரை சேர்ந்தவர் தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பார். தற்போது இந்த தேர்தலில் அடுத்த ஊரை சேர்ந்தவர் தேர்தலில் போட்டியிடுவது என்று கடந்த முறையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அந்த முடிவின் படி தற்போது யாரை வேட்பாளராக களமிறக்குவது என்று பேச்சுவார்த்தை நடை பெறுகிறது. பேச்சுவார்த்தையின் போது கிராமத்தின் முக்கிய கரைக்காரர்கள் விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவிப்பார்கள். பின்னர் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விருப்பத்தை கூறுவார்கள். அதில் யார் சிறந்தவர்கள் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்வார்கள். இதற்கு ஒத்துவரவில்லை என்றால் விரும்பம் தெரிவித்தவர்களின் பெயர்களை எழுதி கிராமத்து தெய்வத்தின் முன்பாக போட்டு சிறுவர்களை வைத்து எடுக்க சொல்லி அதில் யார் பெயர் இருக்கிறதோ அவரை வேட்பாளராக அறிவிப்பார்கள். இப்படி அறிவிப்பவர்கள் ஊர் கோவில் மற்றும் இதர பணிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முக்கியஸ்தர்களிடம் கொடுப்பார்கள். தற்போது இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு சில இடங்களில் சுமூகமாக பேச்சுவார்த்தை முடிந்து விடுகிறது. ஒரு சில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னைகளில் முடிகிறது. ஒரு சில இடங்களில் பேச்சுவார்த்தை ஒத்துவராமல் போட்டி போட்டுக்கொண்டு தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்து வருகின்றனர். என்றார்.

Tags : panchayat leader ,Pudukkottai district ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...