குற்றப்பிரிவு காவலர்கள் என்று கூறி கேரள வாலிபரிடம் 1.5 லட்சம் அபேஸ்

சென்னை: கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளிவயலார் பகுதியை சேர்ந்த  நிஷாந்த் (38), அதே பகுதியில்  பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர், தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த செவ்வாய்க்கிழமை பாரிமுனை வந்தார். அங்கு,  நாராயண முதலி தெரு வழியாக நிஷாந்த் நடந்து சென்றபோது, குற்றப்பிரிவு காவலர்கள் என கூறிக்கொண்டு நிஷாந்தை மறித்த 2 பேர், ‘‘உன் மீது சந்தேகம் உள்ளது. உன்னை சோதனையிட வேண்டும்,’’ எனக்கூறி, நிஷாந்த்  பையை வாங்கி சோதனை செய்தனர். பின்னர், அங்கிருந்து பைக்கில் சென்றுவிட்டனர்.

நிஷாந்த் தனது பையை சோதனை செய்தபோது அதில் வைத்திருந்த 1.5 லட்சம் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், பூக்கடை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* அமைந்தகரை ரயில்வே காலனியை சேர்ந்த காந்த் (22), நேற்று அண்ணா ஆர்ச் வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம பேர், இவரின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

* கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரவாயல் அபிராமி நகர் 4வது தெருவை சேர்ந்த ஆதம் (18), ஏழுகிணறு அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

*  அமைந்தகரை பகுதியில் மாவா தயாரித்து பெட்டிக் கடைகளுக்கு விற்ற ஜார்கண்ட் மாநிலம், தாரானாங்கோ கிராமத்தை சேர்ந்த சங்கர் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

*  தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த துணி வியாபாரி ராமராஜன் (65). நேற்று ஆசாமி ஒருவன், இவரை கத்தி முனையில் மிரட்டி ஒரு சவரன் மோதிரத்தை பறித்து சென்றார்.

*  சைதாப்பேட்ைட ஜோன்ஸ் சாலையை சேர்ந்தவர் உமா (69). ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி. இவர் கார்த்திகை தீபத்தையொட்டி வீட்டில் அகல் விளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து பரிதாபமாக இறந்தார்

Related Stories: