×

648 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவின்போது பயன்படுத்தும் 42 வகை பொருட்கள் அனுப்பி வைப்பு

பெரம்பலூர்,டிச.13: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 648 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவுநாளன்று பயன்படுத்தும் அழியாத மை, வாக்குப்பெட்டி, வாக் காளார் பட்டியல் உள்ளிட்ட 42பொருட்கள் அடங்கிய 648 தொகுப்புகள் தேர்தல் பிரிவினரால் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சி மன்றத் தலைவர், 4ஒன்றியங்களில் உள்ள 76 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 8மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பி னர், 1,032கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 4 ஓன்றியங்களுக்கு உட் பட்ட ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1,237 பதவியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நேரடியாக நடைபெறு கிறது. இதில் 27ம் தேதி முதல் கட்டமாக பெரம்ப லூர், வேப்பூர் ஒன்றியங் களுக்கு உட்பட்ட 293 வாக் குச்சாவடிகளிலும், 30ம் தேதி 2ம் கட்டமாக ஆலத் தூர், வேப்பந்தட்டை ஒன்றி யங்களுக்கு உட்பட்ட 355 வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி வரும் 16ம் தேதிவரை நடக்கிறது.

இந்நிலையில் முதல்கட்டத் தேர்தல் 27ம்தேதியும், 2ம் கட்டத் தேர்தல் 30ம்தேதியும் நடைபெற இருப்பதால், மெரம்பலூர் மாவட்ட தேர் தல் நடத்தும் அலுவலரும், மாவட் டக் கலெக்டருமான சாந்தா உத்தரவின் பேரில், பெரம்பலூர் ஒன்றிய அலு வலக வளாகத்திலிருந்து பெரம்பலூர் மற்றும் வேப் பந்தட்டை, ஆலத்தூர், வேப் பூர் ஒன்றியஅலுவலகங்க ளுக்கு வாக்குப்பதிவு நாள ன்று, வாக்குச் சாவடியில் பயன்படுத்தக்கூடிய வாக் குப் பெட்டி, அழியாத மை, வாக்காளர் பட்டியல், தாள் முத்திரை, சீல் வைக்கப் பயன்படுத்தும் அரக்கு, முக ப்புச்சீட்டு, முகவரி அட்டை, உலோக முத்திரை, உலகச் சட்டம், ஸ்டாம்ப் பேட், வாக் குச்சாவடி அடையாள குறி முத்திரை, ஊசி, நூல், மை ஒட்டும் கட்டை உள்ளிட்ட 42 பொருட்கள்அடங்கிய, 4ஒ ன்றியங்களில் அமைக்கப் பட்டுள்ள, 648 வாக்குச் சாவ டிகளுக்குத் தேவையான தொகுப்புப் பைகள், போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான பணிகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர் தல்) மோகன், வட்டார வளர் ச்சி அலுவலர் (தேர்தல்) மணிவாசகம் உள்ளடங் கிய தேர்தல் பிரிவினர் செய்திருந்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் சென்றது 4 வாக்கு எண்ணும் மையங்கள்...
வருகிற 27ம்தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள தால், பெரம்பலூர் ஒன்றி யத்தில், பெரம்ப லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளா கத்திலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில், உடும்பியம் ஈடன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளா கத்திலும், வேப்பூர் ஒன் றியத்தில் வேப்பூர் பாரதி தாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் மாதிரிக் கல்லூரி வளாகத்திலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் பாடாலூர் அரசு மேல்நி லைப் பள்ளி வளாகத்தி லும் வாக்குஎண்ணும் மை யங்கள் அமைக்கப் பட்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : polling ,polling stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...