×

தா.பழூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

தா.பழூர்,டிச.13: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தா.பழூரில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சூசைராஜ், நாகராஜன், எழிலரசி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், சங்கர், ஆறுமுகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகை குமரன், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேம்புகுடி,கோடாலிகருப்பூர் ,உதயநத்தம், காடுவெட்டான்குறிச்சி, நாயகனைப்பிரியாள், இருகையூர், கார்குடி, காசான்கோட்டை, காரைக்குறிச்சி, திருபுரந்தான், வாழைக்குறிச்சி, தென்கச்சி பெருமாள்நத்தம், தா.பழூர், கோடங்குடி, அணைக்குடம், சோழன்மாதேவி, சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Election Candidates Consultation Meeting ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...