×

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள்


பெரம்பலூர்,டிச.13:பெரம்ப லூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன் னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30ஆகியத் தேதி களில் 2 கட்டமாக நடை பெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்தல் அறிவிக்கை 9ம்தேதி வெளியிடப்பட்டு, வேட்பு மனுத்தாக்கல் 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட் சிகளுக்குட்பட்ட மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன் றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக் காக வாக்காளர்களால் செய்யப்படும் வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டி கள் அனைத்தும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

அதனடிப்படையில் பெரம்ப லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ளாட்சி தேர் தல் வாக்குப்பெட்டி வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையம் உள்ளிட்டவை களுக்காக மேற்கொள்ளப் பட்டுவரும் முன்னேற்பாட் டுப் பணிகளை மாவட்டக் கலெக்டர் சாந்தா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது வாக்குபெட்டிகள்வைக்கப்படும் அறைகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு குறித் தும், வாக்கு எண்ணும் நாளில் வேட்பாளர்களின் முக வர்கள், வேட்பாளர்கள் தேர் தல்தொடர்பாக செய்திசேக ரிக்க வருகை தரும் செய்தி யாளர்களுக்கான ஊடக மையம் உள்ளிட்டவைகள் அமைய உள்ள இடங்கள் குறித்தும், வாக்கு எண்ணு ம் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு, பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் கலெ க்டரால் ஆய்வு செய்யப்பட் டது. ஆய்வின்போது மாவ ட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் தெய் வநாயகி, மகளிர் திட்டஇய க்குநர் தேவநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோக ன், ஒன்றிய பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Elections ,Perambalur District ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...