×

வேட்புமனு தாக்கல் படிவத்தில் ஒன்றியத்தின் பெயர் மாற்றம்

கீழ்வேளூர், டிச.13: கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தேர்தலுக்கு வேட்புமனுவுடன் வழங்கப்படும் பொதுதகவல் படிவத்தில் நாகை ஊராட்சி ஒன்றியம் என்றுள்ளதால் வேட்பாளர்கள் குழப்படைந்துள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியகுழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனு வாங்கப்பட்டு வருகிறது. வேட்பு மனுவுடன் வேட்பாளர் பொது தகவல் படிவம் பெறப்படுகிறது.  இந்த வேட்பாளர் பொது தகவல் படிவத்தை பெற்று அந்த தகவல்களை இணைய தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பொது தகவல் படிவத்தில் இரண்டு இடங்களில் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் என்றுள்ளது.

பொதுவாக படிவங்களில் எழுத வேண்டி இடத்தில் கோடிட்டு காட்டப்பட்டு இருக்கும். தேவையானவற்றை குறியீடு செய்தோ அல்லது நீக்கி கொள்ளும் அளவிற்கு படிவங்கள் தயார் செய்திருக்கும். ஆனால் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்பாளர்களுக்கு வேட்பு மனுவுடன் வழங்கப்பட்ட வேட்பாளர் பொதுத்தகவல் படிவத்தில் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் என்று பிரின்ட் செய்ய வேண்டிய இரண்டு இடத்தில் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் என்றுள்ளது. பொதுவாக வேட்புமனுவில் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது என்ற நிலையில் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் என்று உள்ளதை திருத்தம் செய்து கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் என்று எழுத வேண்டும். வேட்புமனு செய்த பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் இணைக்கும் பொதுத்தகவலில் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் என்றே வேட்பு மனு தயார் செய்துள்ளனர். உடனடியாக கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர் பொதுத் தகவல் படிவத்தை கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் என்று திருத்தம் செய்து வேட்பாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று வேட்பாளர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Union ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...