×

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை

வேதாரண்யம், டிச.13: நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபவிழாவையொட்டி பரணிதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணகோலத்தில் காட்சிக் கொடுத்த இடம். வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கதவைஅப்பரும், சம்மந்தரும் தேவார பாடல்கள்பாடி கதவு திறந்ததாக வரலாறு. இக்கோயிலில் கார்த்திகை தீபவிழாவையொட்டி கல்யாணசுந்தரர் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சொக்கபனை முன்பு நிறுத்தப்பட்டு வேதமந்திரங்கள், சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.தொடர்ந்து வேதாரண்யம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி மாரியப்பன், யாழ்பாணம் வரணீஆதினம், செவ்வந்திநாத பண்டார சந்நிதி மற்றும் உபயதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நாகை சாலை வேதாமிர்தஏரி கீழ்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும் சொக்கபனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

Tags : Vedaranyeswarar Temple ,Carnatic Deepa Ceremony ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில்...