×

பாரம்பரிய சிகை அலங்காரம் குறித்து விழிப்புணர்வு

வேதாரண்யம், டிச.13: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களுக்கு சர்ச்சைக்குரிய வகையிலான சிகைஅலங்காரத்தை தவிர்க்க வலியுறுத்தி ஆசிரியர் சித்திரவேலு பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், முறைப்படுத்தப்பட்ட சிகை அலங்காரம் செய்வதென முடித்திருத்தும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். வேதாரண்யம் தாலுக்காஆதனூர் ஞானம்பாள் தொடக்கப் பள்ளிஆசிரியர் சித்ரவேலு. இவர் மாணவர்களுக்கு புதிய வடிவங்கள் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய முறையில் முடி திருத்தம் செய்வதால் ஏற்படும் பிரச்னைகளை விளக்கியும், அந்த முறையை கைவிடவும் வலியுத்தி பிரசாரம் செய்தார். இவர் நவம்பர் 23ம் தேதி பிரசாரத்தை தொடங்கி முடிதிருத்தும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து பிரசாரம் செய்தார். 15 நாட்களில் 179 கடைகளில் இருந்த தொழிலாளர்களையும், அதன் உரிமையாளர்களையும் சந்தித்தார்.

இதுகுறித்து ஆசிரியர் சித்ரவேலு கூறியது: ஒருபக்கசிகை அலங்காரம், பாக்ஸ் கட்டிங், வி கட்டிங் என வழக்கத்துக்கு மாறாக செய்து கொள்ளும் சிகை அலங்காரம் மாணவர்களுக்கு மட்டுமல்லாது சமூத்துக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. இதைமாற்றி வழக்கமாக செய்து கொள்ளும் முறைப்படுத்தப்பட்ட சிகைஅலங்காரம் செய்யவேண்டும் என தொழிலாளர்களை நேரில் சந்தித்து விளக்கினேன். இதை சிகை அலங்காரம் செய்பவர்களும் ஏற்றுக்கொண்டனர். இதுகுறித்து அவர்களுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பழகன் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பாரம்பரியமான முறையில் மட்டுமே முடித்திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம் எனஉறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், சங்கத்தின் நகர தலைவர் வேதரத்தினம், நிர்வாகி வைரசண்முகம் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்