×

விவசாய நிலங்களில் கோழிக்கழிவுகளை உரமாக்கியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

ஊட்டி, டிச. 13: நீலகிரி மாவட்டத்தில் கோழிக்கழிவுகளை எடுத்து வந்து விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் தற்போது அதிகளவு கேரட், பீ்ட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. விவசாய நிலத்தில் துவக்கத்தில் மாட்டு சானம் போன்ற இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வந்ததனர்.கடந்த சில ஆண்டுகளாக அதிகளவு ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால், நாளடைவில் பூமி பாதிப்பது மட்டுமின்றி, அதில் விளையும் காய்கறிகளை வாங்கி உட்கொள்வதால், மனிதர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், நிலத்தில் உள்ள பல்வேறு உயிரினங்கள், பறவைகள் மற்றும் சிறிய விலங்குகளும் உயிரிழந்து வருகின்றன.  இந்நிலையில், சிலர் தற்போது சமவெளிப் பகுதிகளில் உள்ள கோழி வளர்ப்பு பண்ணைகளில் இருந்து, கோழிக்கழிவுகளை கொண்டு வந்து ஒரு சில விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் ஒரு விதமான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கோழி கழிவுகளின் வாசனைக்காக விவசாய நிலங்களுக்குள் ஏராளமான பாம்புகள் உட்பட சில விஷ ஜந்துக்கள் வருகிறது. மேலும் ஈக்கள் மற்றும் கொசுக்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலங்களை ஒட்டியுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில விவசாயிகள் தொடர்ந்து இந்த கோழிக்கழிவுகளை பயன்படுத்துதால், சுற்றுச்சூழல் மாசுப்பட்டு விவசாயிகள் பாதித்து வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : lands ,
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...