×

மாவட்ட சோதனைச்சாவடிகளில் வரி வசூலிக்க மின்னணு ரசீது அறிமுகம்

ஊட்டி,  டிச.13: நீலகிரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் மின்னணு இயந்திரம் மூலம்  ரசீதுகளை வழங்கி பசுமை வரி மற்றும் நுழைவு வரி வசூலிக்கப்படும் என கலெக்டர்  தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- நீலகிரி  மாவட்டத்தில் உள்ள கல்லாறு மற்றும் கக்கநல்லா சோதனைச்சாவடிகளில் நுழையும்  வாகனங்களுக்கு பசுமை வரியும் மற்றும் குஞ்சப்பனை, சோலடி, பாட்டவயல், தாளூர்  மற்றும் நாடுகாணி சோதனைச் சாவடிகளில் நுழைவு வரியும் மற்றும் தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் ெபாருட்களை பறிமுதல் செய்யும்போது விதிக்கப்படும்  அபராத தொகையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரசீது அச்சிடப்பட்டு முன்னாள்  ராணுவ படை வீரர்களைக் கொண்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இந்த 7 சோதனைச்சாவடிகளில் ரசீது சீட்டு  முறைக்கு பதிலாக, மின்னணு இயந்திரம் மூலம் ரசீது வழங்கி வசூல் செய்யும் முறை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்திற்குள் இந்த  சோதனைச்சாவடிகளில் நுழையும் வாகனங்களுக்கான பசுமை, நுழைவு வரி மற்றும் தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான அபராத தொகைக்கான ரசீதுகளை இனி வரும்  காலங்களில் வாகன ஓட்டிகளுக்கு இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் ரசீதுகளை  பெற்று மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.

Tags : Introduction ,district checkpoints ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...