×

விளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்

உடுமலை,டிச.13: உடுமலை தாலுக்கா,மடத்துக்குளம் தாலுக்கா பகுதிகளில் மலைப்பகுதியில் இருந்து 15 கி.மீ தூரம் வரை காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. இப்பள்ளிகள் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளம் படுகைகளில் குட்டி ஈன்று பல்கி பெருகி விட்டது. விவசாயிகள் மக்காச்சோளம், கரும்பு, காய்கறிகள்,வாழை மற்றும் இளம் தென்னை கன்றுகள் என வித்தியாசம் பார்க்காமல் அனைத்து விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து காட்டுபன்றிகள் புகுந்து சேதம் விளைவித்து வருகின்றன. பன்றிகளை விவசாயிகள் விரட்ட முற்பட்டால் அவைகள் விடாமல் விரட்டி விவசாயிகளை தாக்கி படுகாயப்படுத்தி வருகின்றன. காட்டில் வசித்து வந்த இப்பன்றிகள் கிராமங்களில் வளர்ந்து ஊர்பன்னிகளாகி விட்டன. காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதோடு, தொடர்ந்து அவை தாக்குவதால் காயமும் அடைந்து வருவது குறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்வனத்தில் விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 17ம் தேதி உடுமலை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தனர்.காட்டுபன்றிகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் கிராமங்கள் தோறும் விவசாயிகள் கூட்டம் நடத்தி 17ம் தேதி போராட்ட களத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட வன அலுவலர் பிலிப் உத்தரவின் பேரில் உதவி மாவட்ட வன அலுவலர் கணேஷ்ராம் மேற்பார்வையாளர் வனசரகர் தனபாலன் மற்றும் வனத்துறை ஊழியர்கள்,வேட்டை தடுப்பு காவலர்கள ஆகியோர் நேற்று சர்க்கார்புதூர் பகுதியில் ராமசாமி என்பவரது மக்காச்சோள காட்டிற்குள் காட்டுப்பன்றியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், விவசாய பயிர்களை சேதம் விளைவிக்கின்ற காட்டுப்பன்றிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கூண்டிற்குள் காட்டுப்பன்றிகள் விரும்பி உண்ணக் கூடிய பழவகைகள், பிஞ்சு நிலையில் உள்ள மக்காச்சோள கதிர்கள் மற்றும் தேங்காய்கள் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் காட்டுப்பன்றிகள் போன்ற வனஉயிரினங்களால் சேதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட வனச்சரக அலுவலகங்கைள தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்கள் வழங்கினால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினர்.

Tags : Forest officials ,
× RELATED நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை;...