×

நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி, டிச. 13: பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரை  நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலும்,  தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம், நான்குவழிச்சாலையமைக்க 3 ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, நிலம் கையகப்படுத்துவது குறித்து, நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம் பல கட்டமாக நடைபெற்றது.  ஆனால், பொள்ளாச்சி பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு அரசு சந்தை மதிப்பில் வழங்க வேண்டும்,  இழப்பீடு தொகையை வாய்மொழியாக அதிகாரிகள் கூறுதை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இதுவரை நில இழப்பீட்டுக்கான உரிய தொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.இது தொடர்பாக நேற்று, பொள்ளாச்சி சப்&கலெக்டர் அலுவலகத்தில், நில உரிமையாளர்கள் பலர் மீண்டும் மனு கொடுத்தனர். அவர்கள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியிலிருந்து  அனுப்பர்பாளையம் கிராமங்களில் உள்ள விவசாய நிலமானது, பொள்ளாச்சி-திண்டுக்கல்  தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்படுகிறது. .
கையகப்படுத்தப்படும் நிலத்தை வாங்கும்போது இருந்ததைவிட இரண்டரை மடங்கு இழப்பீடு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில், சந்தை மதிப்பு என்பது அதிகமாகும். எனவே, சந்தை மதிப்புபடி உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். வாய்மொழியாக தெரிவிக்கும் இழப்பீடு தொகையை நாங்கள்  ஏற்கமாட்டோம்.  விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்’ என்றனர்.

Tags : land ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...