×

மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

மேட்டுப்பாளையம், டிச.13: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தனியார் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து கோவை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள சுக்கு காபி கடை அருகில் பவானி ஆற்றில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது அந்த அணைக்கு பக்கத்திலுள்ள ஒரு விவசாய நிலத்தின் வழியாக பவானி ஆற்றை நோக்கி வாய்க்காலில் நீலநிறத்தில் நுரையுடன்  கழிவுநீர் வெளியேறி  ஆற்றில் கலப்பதாக மேட்டுப்பாளையம் வட்டாட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் செல்லும் பாதையை ஆய்வு செய்தார்

அவர் இதுகுறித்து கோவையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்  தண்ணீரை ஆய்வு செய்தனர். தண்ணீர் மாதிரியை ஆய்வுக்கு கோவைக்கு சென்றுள்ளனர். ஆய்வு முடிவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Inspection ,Mettupalayam ,Bhavani River ,
× RELATED காஞ்சிபுரம் நகர பகுதிகளில் நள்ளிரவில் கலெக்டர் திடீர் ஆய்வு