×

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.13:சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ஈரோடு வழியாக இயக்கி வந்த நாகர்கோவில்-மும்பை, மும்பை-நாகர்கோவில் ரயில்கள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டது. இதேபோல், திருநெல்வேலி-தாதர் மற்றும் தாதர்-நாகர்கோவில் ரயில்கள் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்தது.இந்த 4 ரயில்களும் ஈரோடு வழியாக பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதன்மூலம், தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி தரும் ரயில்நிலையமாக ஈரோடு ரயில்நிலையம் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த 4 ரயில்களையும் ஈரோடு வழியாக இயக்காமல் நாமக்கல் வழியாக இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், மயிலாடுதுறை-மைசூர், மைசூர்-மயிலாடுதுறை, தூத்துக்குடி-மைசூர், மைசூர்-தூத்துக்குடி ஆகிய ரயில்களும் அடுத்த கட்டமாக நாமக்கல் வழியாக இயக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், மீண்டும் இந்த ரயில்களை ஈரோடு வழியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் ரவி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

Tags : Congress ,party protests ,railway administration ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...