×

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதற்கட்ட பயிற்சி துவக்கம்

ஈரோடு, டிச.13: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல் முதற்கட்ட பயிற்சி துவங்க உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய நாட்களில் நடக்க உள்ளது. இதற்காக, மாவட்டத்தில் உள்ள 14 யூனியன் இரண்டாக பிரிக்கப்பட்டு இரு கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள், ஊரக வளர்ச்சி துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பிற பணியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கான பணி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 27ம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கு நாளை (14ம் தேதி) முதற்கட்ட பயிற்சியும், 21ம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சியும், 26ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கு (30ம் தேதி), வரும் 14ம் தேதி முதற்கட்ட பயிற்சியும், 21ம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சியும், 29ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சியும் வழங்கப்படும். இந்த பயிற்சிகள், அந்தந்த யூனியன் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மண்டபம், கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும். 27ம் தேதி மற்றும், 30ம் தேதி நடக்கும் தேர்தலுக்கு, பணியாளர்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் கட்ட பயிற்சியின்போது, அவர்கள் எந்த வாக்குசாவடியில் பணி செய்ய வேண்டும் என்ற விவரம் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்படும்.

Tags : Commencement ,election workers ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...