×

தனிமனித ஒழுக்கம் அவசியம் தேவை

ஈரோடு, டிச.13: தனி மனித ஒழுக்கம் இல்லாவிட்டால் அனைத்தும் பாழாகிவிடும் என ஈரோட்டில் நடந்த பாரதி விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் பேசினார்.மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஈரோட்டில் பாரதி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு பாரதி விழா ஈரோடு திண்டலில் நடந்தது. விழாவிற்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் உருவப் படத்தை பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் மதிவாணன் திறந்து வைத்தார்.

இதில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் பேசுகையில்,`மகாத்மா காந்தியின் மறு அச்சாகவும், விவேகானந்தரின் மறு உருவமாக விளங்கியவர் பாரதி. காந்தியையும், விவேகானந்தரையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றால் பாரதியை மட்டும் படியுங்கள்.
மகாத்மா காந்தியின் சத்திய சோதனை, விவேகானந்தரின் உரைகள், மனிதனுக்கு லட்சியம், உறுதி, தனி மனித ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. தலைமை பீடத்துக்கு யார் வந்தாலும், தனி மனித ஒழுக்கம் இல்லை என்றால் அனைத்தும் இழந்ததற்கு சமம். நமது சந்ததியினருக்கு உழைப்பும், வியர்வையையும்தான் விட்டு செல்ல வேண்டும்.’ என்றார்.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...