கோயில், வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது

புளியங்குடி, டிச. 13: புளியங்குடி கற்குவேல் அய்யனார் கோயில், கெங்காபரமேஸ்வரி கோயில், சுடலை மாடன் கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் மற்றும் காளையபாண்டியன் என்பவர் வீட்டில் செல்போன், 2.5 பவுன் நகைகள் திருட்டு போனது. ேமலும் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவங்களில் ஒரே நபர்தான் ஈடுபடுவது தெரிய வந்தது.இதையடுத்து கொள்ளையனை பிடிக்க புளியங்குடி இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், எஸ்ஐ தர்மராஜ், போலீசார் மதியழகன், சிவராமகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கற்குவேல் அய்யனார் கோயில் மற்றும் விநாயகர் கோயிலில் பொருத்தியிருந்த சிசிடிவி காமிராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட புளியங்குடி பகலமுடையான் தெருவைச் சேர்ந்த சுந்தரேசன் என்ற மாரியப்பன் மகன் சூரியகாந்தி (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 மற்றும் 2.5 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: