×

கலசபாக்கம் அருகே வெங்காயத்தில் வேர்புழு தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு

கலசபாக்கம், டிச.13: தினகரன் செய்தி எதிரொலியால் கலசபாக்கம் அருகே வெங்காயத்தில் வேர்ப்புழு நோய் தாக்குதல் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கலசபாக்கம் அடுத்த கடலாடி, கீழ்பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வேர்ப்புழு நோய் தாக்குதலால் சாம்பார் வெங்காயத்தின் மகசூல் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு வெங்காயத்தை பாதுகாத்திட ஆலோசனை வழங்க வேண்டும் என நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தோட்டக்கலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன்பேரில், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்(பொறுப்பு) குமரவேல், உதவி இயக்குனர்கள் கண்ணன், லோகேஷ், ேதாட்டக்கலை அலுவலர் அஸ்வினி, உதவி தோட்டக்கலை அலுவலர் முருகன் ஆகியோர் வெங்காயம் சாகுபடி செய்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு, அதனை பாதுகாக்க வேண்டிய நடவடிககைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

Tags : Investigation ,attack ,Kalasakkam ,
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்